அன்புடையீர்,
வணக்கம்.நாம் தலை முழுக பயன்படுத்தும் பொருளும் கற்ப மருந்தே என்பது பற்றி அறிந்து கொள்வோம்.
தலைமுழுகப் பயன்படுத்தும் பொருள் கற்ப முறையே.
வணக்கம்.நாம் தலை முழுக பயன்படுத்தும் பொருளும் கற்ப மருந்தே என்பது பற்றி அறிந்து கொள்வோம்.
தலைமுழுகப் பயன்படுத்தும் பொருள் கற்ப முறையே.
கற்பங்கள் உண்ணும் முறைகளையும், பத்திய உணவுகளையும் பின்பற்றி உடலைப் பாதுகாப்பதைப் போலவே, சாதாரணமாகத் தலைமுழுகப் பயன்படுத்தும் பொருளும் கற்பமுறையாக உரைக்கப் படுகிறது.
" நேமேதான் நெல்லிக்காய் பலந்தான் ஆறு
நிலையாக நீர்மிளகு பலந்தான் அஞ்÷
அஞ்சப்பா கடுக்காய்தான் பலந்தான் நாலு
அப்பனே வேப்பரிசி பலந்தான் மூன்று
மஞ்சளப்பா மஞ்சளது பலந்தான் ரெண்டு
வகையாக இவைகளைக் கூட்டிக் கொண்டு''
என்று பொருள்களை வரிசைப்படுத்திய முறையை அவற்றின் அளவைக் கொண்டே அமைந்திருப்பதும் நோக்கத் தக்கது. இதனையே,
" பூ நெல்லி நீர்மிளகு பொற்கடுக்காய் வான்மஞ்சள்
கானகத்து வேம்பரிசி காரிகையே மானங்கேள்
ஒன்றரை ஒன்றே கால் ஒன்று உறுதிமுக்கால்
கன்றரைக்கை யான் நீரில் தேய்.''
இச்செய்யுளும் மேற்கண்ட ஐந்து பொருள்களையே உரைத்திருந் தாலும், வேம்பரிசியும், மஞ்சளும் அளவில் மாறுபடுகின்றன.
மேற்கண்ட கற்பத்தினால் தலை (கபாலம்) இறுகும் என்று திருமூலரும் (கற்பமுறை. செய். 37) திருமந். செய். 849), (கபாலம்) தலை இறுகுவதுடன், முடி கருக்கும்; பகலில் வான்மீன்கள் தோன்றும். உடலிலுள்ள நச்சு நீர் வற்றும், உடல் பொன் போலாகும் என்று நந்தீசரும் உரைக்கக் காணலாம்.
தூதுவளையைக் கறி, வற்றல், ஊறுகாய், கீரை இப்படி முறைப் படுத்தி, ஒரு மண்டலம் உண்டு வந்தால் இரவும் பகல்போலத் தோன்ற கண்ணொளி கூடும்.இதனை இலக்கிய நயத்துடன்,
" திருக்குளத்தை நன்றாக்கித் தின்னுவையே னல்ல
திருக்குளத்தைப் போலே திருத்துந் திருக்குளத்தை
யெல்லா மிரவுவிளை யென்னவருந் தூதுவளை
யெல்லா மிரவு மிளி யென்''
நீர்க்குளத்தைத்
திருத்தி விளங்கச் செய்வதைப் போல் கண்குளமான நேத்திரத்திலிருக்கின்ற பித்த
நீர் முதலான மலினங்களைப் போக்கும் செயலைத் தூதுவளை செய்யும் என்பதைக்
அறியலாம்.
கூறப்படும்
கற்பத்தின் பொருள்கள் சிறந்த பொருள்களிலிருந்து மட்டுந்தான்
செய்யப்படுகின்றன என்ற நிலையில்லை.
குப்பைக்குச் செல்ல வேண்டிய பொருள்
என்று தூக்கி எரியப்படுகின்ற பொருள்கள் கூட கற்பங்களாக ஆகின்றன என்பது
வியப்பிற்குரிய ஒன்றாகவும், அதனால் விளையக் கூடிய நன்மை அதனினும் வியப்பாகவும் தோன்றும்.
பல்வேறு வகைப்பட்ட பறவைகளின் முட்டை ஓடுகள் கற்ப மாகின்றன. கோழி, பருந்து, கிளி, காக்கை, காடை, மயில் ஆகிய வற்றின் முட்டை ஓடுகள் பற்பம் எனும் முறையில் கற்பமாகின்றன. அவை, முறையே, அத்திசுரம், மூர்ச்சை, காசம், சத்தி , பிடிப்பு, வெட்டை, உப்புசம், பெருவியாதி, வெப்பம், மாரடைப்பு, கபமிகுதி, சன்னி ஆகியவற்றைப் போக்குகின்றன.
No comments:
Post a Comment