அன்புடையீர்,
வணக்கம்.இந்தப் பதிவில் இரத்த சுத்தி பற்றி அறிவோம்.
வணக்கம்.இந்தப் பதிவில் இரத்த சுத்தி பற்றி அறிவோம்.
இரத்தச்சுத்தி
உடல்
தூய்மைக்கு (காயசித்தி) இரத்தம் தூய்மையாக வேண்டும். இரத்தத்தை கொண்டே
உடலின் நோய்க் குற்றங்கள் அறியப்பட்டு வருகின்றன. அதேபோல் இரத்தத்தைத்
தூய்மையாக்கி, உடலைத்
தூய்மையாக்கும் முறை சித்த மருத்துவத்தின் கோட்பாடுகளில் ஒன்றாக
அறியப்படுகிறது. இரத்தத்திலுள்ள நோய்க் கிருமிகளை அழிப்பதே மருத்துவத்
துறையின் தலையாயப் பணி என்பதை அடிப்படையாகவும் கொண்டிருக்கக் காண்கிறோம்.
அதே போல், உடல்
நோயுற்றிருந்தால் துர்நாற்றமும், நிறத்தில்
மாற்றமும் ஏற்படுவதைக் காணமுடிகிறது. இதற்கு இரத்தத்தில் நோய்க்கிருமிகள்
அண்டி யிருப்பதே காரணமாகும். இவற்றையெல்லாம் முறைப்படுத்துவதே மருந்தின்
பணியாகும். அதனையே காயசித்தியின் தொடக்கமாகக் கருதுவர்.
" கரிசாலை, குப்பைமேனி, கரந்தை, வல்லாரை, நீலி,
பொற்றலை, செருப்படை ஆகியவற்றை நிழலிலுலர்த்தி
இடித்துச் சூரணம் செய்து வெருகடி அளவு, தினமும்
தேனில், ஒரு மண்டலம் உண்டால், உடல்
நோய்கள் போகும் காய சித்தியாகும்.''
மேற்கண்ட மூலிகைகள் மிகவும் எளிமையாகக் கிடைக்கக் கூடியவை. ஆடு, மாடுகள் அன்றாடம் தின்னக் கூடியவை. என்றாலும் அவற்றிலுள்ள மருத்துவக்குணங்களும், ஒன்றுடன் ஒன்று சேர்ந்து ஆற்றுகின்ற மருந்தாற்றலும் அறியப்படாமல் இருக்கும் செய்திகளாகும்.
" உண்ணப்பா மண்டலந்தான் நோயும் போகும்
உதிரத்தில் உத்தமனே நோயும் போகும்.''
ஒரு
மண்டலம் உண்டால் நோய் போவதுடன் இரத்தத்திலுள்ள கிருமிகள் எல்லாம் அழிந்து
போகும் என்பது குறிப்பிடத்தக்கது. கிருமிகள் எவை என்று குறிப்பிடாமல்
கூறப்பட்டுள்ளதால், உடலில், இரத்தத்தில் இருக்கத் தகாத கிருமிகள் என்றே கருத வேண்டும்.
" பண்ணப்பா பவளம்போல் சிவந்தி ருக்கும்
காயமெல்லாம் சம்பழத்தின் வாசம் வீசும்
விண்ணப்பா அந்தரத்தில் மீன்க ளெல்லாம்
வெகுளாமல் பகல்காணத் தோற்று விக்கும்''
உடல் வண்ணம் பவளம் போல் சிவந்து காணும். அத்துடன் சம்பழத்தின் வாசம் போல உடலிலிருந்து மணம் வீசும். கண்ணொளி ஏற்படுவதுடன், விண்ணகத்திலுள்ள
மீன்களெல்லாம் கற்பம் உண்டவர் காண்பதைக் கண்டுவெகுளாமல் கண்ணின்
காட்சிக்கு ஏதுவாகித் தோற்றமளிக்கும் என்று கண்ணொளியைச் சிறப்பித்துக்
கூறப் பட்டுள்ளது
முறைகள் மிகவும் எளிதாக இருக்கின்ற போதிலும் அதனுள் புதைந்துள்ள பயன்கள் அரிதாகவும் சிறப்பாகவும் இருக்கின்றன.
No comments:
Post a Comment